அஜித்துடன் மோத போகும் விஜய் பட வில்லன்..? இவரு செம்ம மாஸ்ல காட்டுவாரு..!

Author: Rajesh
1 May 2022, 5:55 pm

நானும் ரவுடி தான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த திக வரவேற்பை தொடர்ந்து, சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி காம்போவில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருப்பதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது, இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்று இணையத்தில் செய்திகள் வெளியானது, ஆனால் தற்போது அந்த செய்தியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுத்து இருக்கிறார். அஜித்தின் ‘ஏகே-62’ படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்கப்போகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர் விஜய் சேதுபதியை எப்போதும் என் படங்களில் கதாநாயகனாக மட்டும் தான் நடிக்க வைப்பேன், ஒருபோதும் அவரை எனது படங்களில் வில்லனாக நடிக்க வைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் விஜய் சேதுபதி ‘ஏகே-62’ படத்தில் வில்லனாக நடிக்கமாட்டார் என்கிற செய்தி உறுதியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து இருந்தார், அதேபோல தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்ததால் அஜித் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இவர் நடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் ‘ஏகே61’ படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?