சிக்கும் பிரபல தொழிலதிபர்? சென்னை முழுவதும் சல்லடை போடும் அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு!!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2025, 11:42 am
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனை நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அரவிந்த் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, புரசைவாக்கத்தில் உள்ள அரவிந்தின் வீட்டிற்கு இரண்டு வாகனங்களில் வந்த 8 அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையின் கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 இடங்களில் இந்த சோதனை தொடர்கிறது.
சோதனை முடிவடைந்த பிறகு, இதுதொடர்பான முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரவிந்தின் வணிக நடவடிக்கைகள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
