கோவையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் புகுந்து அமெரிக்க டாலர்கள், நகைகள் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 8:44 pm

கோவை: துடியலூர் அருகே தொழில் அதிபரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 15 பவுன் தங்க நகைகளை மற்றும் அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கோவை துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 43). தொழிலதிபரான இவர் கடந்த 18ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுப்பதற்காக இவர் தனது மனைவி குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

அதனையடுத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்பொழுது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் கலைந்து கிடந்தன.

மேலும் பீரோவில் வைத்திருந்த தங்க மோதிரம், வளையல், கம்மல், செயின் உள்ளிட்ட 15 பவுன் தங்க நகைகள், அமெரிக்கா டாலர்கள், லேப்டாப் ஆகியவை திருடப்பட்டு இருந்துள்ளன. தொடர்ந்து இவர் துடியலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேற்கொண்டு கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!