அது என்ன அணிலா.. அணில் கும்ப்ளேவா.. ஸ்டம்ப் மாதிரி கரண்ட் கம்பியை தாக்குறதுக்கு!! அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்த பிரபல நடிகை…!!!

Author: Babu
23 June 2021, 10:55 am
senthil balaji - updatenews360
Quick Share

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட அணில்களும் காரணம் எனக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேச்சை பிரபல நடிகை விமர்சித்துள்ளார்.

இதனிடையே, ஊரடங்கு முடியும் வரையில் மின்வெட்டு ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலராஜி கூறியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதாவது, மின்கம்பிகளில் அணில்கள் செல்வதால், உரசல் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதாக தெரிவித்தார். அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kasthuri - Updatenews360

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்தை விமர்சித்து பிரபல நடிகை கஸ்தூரி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- Strictly satire- Just for humour. Dravidian Stock take a chill pill ! செல்லூர் ராஜு வின் விஞ்ஞான அறிவுக்கு விசிறியாக இருந்தவரெல்லாம் இப்போ செந்தில் பாலாஜிக்கு மாறிவிட்டார். கள்ளிக்கு பிள்ளை சாக்கு, கறண்ட் கம்பிக்கு அணில் பிள்ளை சாக்கு !

அது என்ன அணிலா அணில் கும்ப்ளே வா ஸ்டம்ப்பை தூக்குற மாதிரி கரண்ட் கம்பியை தாக்குறதுக்கு ! அணில் என்ன ராம்குமாரா கரண்ட் கம்பியை கடிக்கறதுக்கு ? அணில் என்ன அவாளா ? அநியாயமா பழிபோடறதுக்கு? கருப்புச்சட்டை காக்காவை விட்டுட்டு ராமருக்கு உதவிய அணிலை டார்கெட் பண்ணுறாங்க , எவ்வளோ பெரிய (யார்) அரசியல் பாருங்க !, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 265

0

0