கோவையில் பிரபல தனியார் கல்லூரி மாணவருக்கு கத்திக் குத்து : மூன்று மாணவர்கள் தலைமறைவு.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2022, 3:48 pm
College Student Clash - Updatenews360
Quick Share

கோவை : மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 21). இவர் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இம்ரான் நசீர் (வயது 21), கும்பகோணத்தைச் சேர்ந்த தருண் சுந்தர் (வயது 22) மற்றும் கலித் (வயது 20), அக்பர் (வயது 19)  ஆகியோர் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஹரிகிருஷ்ணனின் நண்பர் தனுஷ் என்பவரை தாக்கினர்.

இதுகுறித்து ஹரிகிருஷ்ணனும் அவரது மற்றொரு நண்பர் புஜந்த ராஜா என்பவரும் அவர்களிடம் சென்று கேட்டனர்.

இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் மற்றும் புஜந்த ராஜா மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள துணி கடைக்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த இம்ரான் நசீர், தருண் சுந்தர், கலித், அக்பர் அகியோர் திடீரென ஹரிகிருஷ்ணன் மற்றும் புஜந்த ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது அவர்களுக்கு இடையே தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து ஹரிகிருஷ்ணன் மற்றும் புஜந்த ராஜவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.

அப்போது இம்ரான் நசீர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புஜந்த ராஜாவை குத்தினார். பின்னர் 4 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.பலத்த காயமடைந்த புஜந்த ராஜா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் செட்டிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தருண் சுந்தரை கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Views: - 195

0

0