ஸ்கெட்ச் போட்டு காத்திருந்த ரவுடிகள்.. சுத்தி வளைத்த போலீசார்…!!

Author: Udhayakumar Raman
26 September 2021, 6:32 pm
Quick Share

சென்னை: ஓட்டேரியில் முன் விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டம் தீட்டி பதுங்கியிருந்த 5 ரவுடிகளை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 5 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை ஓட்டேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஓட்டேரி டோபிக்கண்ணா பூங்கா அருகே சிலர் கத்தியோடு பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற ஓட்டேரி   போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சென்னை வீராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை வயது 22. ஓட்டேரி பகுதியை சேர்ந்த ரமேஷ் 23. வீராபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 20. பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா 27. அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் 28 என்பது தெரிய வந்தது.

இவர்கள் அனைவர் மீதும் ஏற்கனவே கொலை , கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த மாணிக்கம் என்பவரின் கூட்டாளிகள் என்பதும்  அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த சத்யா என்பவருக்கும் மாணிக்கம் என்பவருக்கும அப்பகுதியில் கஞ்சா விற்பதில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் தற்போது சத்தியா போலீசாரால் கைது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் இந்த சமயத்தில் சத்யாவின் கூட்டாளிகளை வெட்டுவதற்காக  மாணிக்கத்தின் கூட்டாளிகள் ஓட்டேரியில் பதுங்கியிருநதது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமருந்து 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து போலீசார் அவரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 102

0

0