“என்னால இவளோதா போட முடிஞ்சுது“ : தங்க முகக்கவசம் அணிந்த பிரபல ரவுடி!! (வீடியோ)

23 November 2020, 4:14 pm
Madurai Rowdy - Updatenews360
Quick Share

மதுரை : மதுரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தங்கத்தாலான முகக்கவசம் அணிகிறேன் என்று ரவுடி வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை சிவகங்கை மெயின் ரோட்டில் அமைந்துள்ள வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் ( எ ) வரிச்சியூர் செல்வம் ரவுடி என ஒரு காலத்தில் போலீஸாரால் அழைக்கப்பட்டாலும் , தற்போது குற்றச் செயல்களைத் வரிச்சியூர் செல்வம் தவிர்த்து ஒதுங்கி வாழ்கிறார்.

எப்போதும் பிறரைவிட வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உடல் முழுவதும் நகைகள் அணிவதில் அலாதி பிரியம் கொண்டவர் . தற்போது கொரோனாவைத் தடுக்க முகக்கவசத்தையும் அவர் தங்கத்தில் அணிந்துள்ளார் .

இதுகுறித்து ‘ அவர் கூறியிருப்பதாவது நான் வெளியில் செல்லும்போது சுமார் 300 சவரன் வரை நகைகளை அணிந்து செல்வேன். அதற்கு மேல் சுமக்க முடியவில்லை . இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க முகக் கவசத்தை மட்டும் துணியால் அணிவது வேறு மாதிரி இருந்தது . எனவே முகத்தை அளவெடுத்து சுமார் 10 சவரனில் முகக்கவசம் செய்தேன் என்று கூறினார்.

Views: - 39

0

0