அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? காதல் கணவரை விவாகரத்து செய்ய பிரபல சீரியல் நடிகை முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2022, 6:14 pm
Divorce - Updatenews360
Quick Share

சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். காரணம் ஒரு சீரியல் என்பது கிட்டதட்ட 2 வருடங்களுக்கு மேல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சீரியலில் நடித்தால் போதும், சம்பாதித்து விடலாம். அதனால்தான் பல வெள்ளித்திரை நடிகர்கள், நடிகைகள் சின்னத்திரைக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் சீரியல்கள் இல்லதரசிகளின் அபிமானதாக மாறிவிட்டதால் சுலபமாக பிரபலமடைந்துவிடலாம். இப்படி சீரியல் மூலம் பிரபலமடைந்து சினிமாவில் உச்சம் தொட்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

ஆனால் அதே சமயம், சீரியலில் இருந்து சினிமாவுக்கு செல்பவர்கள் இனி நாம்தான் அடுத்த ராஜா, ராணி என நினைத்து கொள்கின்றனர். அந்த நினைப்பு தான் பலரின் வாழ்க்கையில் பொழைப்பை கெடுத்துள்ளது.

இதையெல்லாம் தெரிந்தும் சிலர் இந்த கிணற்றில் குதிப்பது தான் வேதனையாக உள்ளது. சீரியலில் கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை ரச்சிதா மகலாட்சுமி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Rachitha Mahalakshmi Wiki, Age, Biography, Husband, Family, Baby, Image

இதனால் சீரியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமாவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த முடிவுக்க காதல் கணவரான தினேஷ் முட்டுக்கட்டை போட்டுள்ளார். காதலித்து திருமணம் செய்த கணவர் பல தொடர்களில் நடித்து வந்த நிலையில் தற்போது அவர் படவாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்.

Rachitha Mahalakshmi Wiki, Age, Biography, Husband, Family, Baby, Image

ரச்சிதா படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில், அவரது கணவர் தினேஷ் வீட்டில் சும்மா இருக்கிறார். இதனால் இருவருக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது. இருப்பினும் இதை வெளிகாட்டிக்கொள்ளாமல் தனது வேலைகளில் ரச்சிதா பிசியாக இருந்துள்ளார்.

Dinesh Gopalsamy Age, Height, Weight, Body, Wife or Husband, Caste,  Religion, Net Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography,  Movies, Shows, Photos, Videos and More

ஆனால் இரண்டு மாதத்திற்கு பின்பு இருவரும் சண்டை போட்டு தனித்தனியே பிரிந்தனர். சினிமாவில் நடிக்க கணவர் எதிர்ப்பதால் ரச்சிதா விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். அதிக ரசிகர்களை கொண்ட ரச்சிதா தற்போது சினிமாவில் நுழைய உள்ள நிலையில் இந்த முடிவை கைவிட வேண்டுமென்று ரசிகர்களே கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Rachitha Mahalakshmi Wiki, Age, Biography, Husband, Family, Baby, Image

தற்போது இருவரும் அவரவர் வீட்டில் தனியாக வாழ்ந்து வருவதாகவும், விவகாரத்து குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பிரபல பத்திரிகையாளரும் குணச்சித்திர நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Views: - 1342

0

0