ரஜினி வீட்டு முன்பு குவிந்த ரசிகர்கள் : தலைவர் சொன்ன தீபாவளி வாழ்த்து!!

14 November 2020, 11:47 am
rajini wish - Updatenews360
Quick Share

சென்னை போயஸ் தோட்டத்தில் வீடு முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டியைன்று ரஜினிகாந்த் தனது வீட்டின் வெளியே தனக்காக காத்திருக்கும் ரசிகர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவிப்பார். அதன் படி இன்றும் போயஸ் கார்டனில் ரஜினி வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

Border Collie

கொரோனா காரணமாக பல மாதங்களாக ரஜினிகாந்த் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்து வந்த நிலையில், தீபாவளியான இன்று அவரை பார்க்கும் ஆவலோடு ரசிகர்கள் பலர் திரண்டிருந்தனர்.

இதையடுத்து வீட்டுக்குள் இருந்தபடியே கையசைத்து ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். ரஜினி வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்கள் ரஜினியை பார்த்ததும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

Views: - 22

0

0