ஆட்சியர் முன்னிலையில் வேளாண்துறை அதிகாரிகள் மீது விவசாயி லஞ்சப் புகார் : குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2021, 4:40 pm
corruption complaint -Updatenews360
Quick Share

விழுப்புரம் : விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாய பிரதிநிதி ஒருவர் வேளாண் துறை அதிகாரிகள் மீது லஞ்சம் வாங்குவதாக பகிரங்கமாக கூறியதற்கு மாவட்ட ஆட்சியர் வருத்தம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சென்றபின் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் விவசாய பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வந்த நிலையில் விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் வேளாண் துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் சரியான முறையில் நடக்க வில்லை எனவும் விவசாயிகள் தலைநிமிர்ந்து நடப்பவர்கள் என்றும் யாரிடமும் பிச்சை கேட்கவில்லை என்றும் அதுபோன்று அதிகாரிகளும் விவசாயிகளிடம் பத்துரூபாய் வாங்குவதாக இருந்தால் நினைத்துப் பார்த்து வாங்கவும் என்று கூறினார்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் கோபத்துடன் சில விஷயங்களை பொதுப்படையாக பேசக்கூடாது என்றும் எங்களுடைய அதிகாரிகளை என் முன் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் வருத்தப்படுகிறேன் என்று கூறினார்.

மேலும் மயிலம் பகுதியில் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள் என்று வேளாண்துறை அதிகாரிகள் கூறியபோது விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் யாரும் இதுபோன்று செய்ய மாட்டார்கள் என்றும் வேறு யாரோ மூன்றாவது மனிதர் விவசாய சங்கங்களின் போர்வையில் வந்து மிரட்டி இருக்கலாம் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினேன்.

ஆனால் ஏதாவது குறைகள் இருந்தால் அதற்கென்று வேறு இடம் உள்ளது. அங்கு பேசிக்கொள்ளலாம் விவசாயிகள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியதால் விவசாயிகள் மத்தியில் பரபரப்பும் அமைதியும் நிலவியது.

Views: - 157

0

0