விவசாயத்தை அழித்து பணத்தையா சாப்பிட போறீங்க..? விவசாய நிலத்தை அழித்து புதிய பேருந்து நிலையம் எதற்கு…? குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயி உருக்கம்..!!

Author: Babu Lakshmanan
26 November 2022, 2:06 pm

கரூர் ; புதிய பேருந்து நிலையம் அமையும் இடம் விவசாய நிலம் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்கியது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 11 விவசாயிகளுக்கு 7.01 மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பல்வேறு தரப்பு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது, தற்போது புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தை பற்றியும் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மனதை உருக்கும் பேச்சும் தற்போது வைரலாகி வருகின்றது.

நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம், அந்த விவசாயத்தை அழித்துவிட்டு பணம் பணம் என்று அலைவது கடைசியில் பணம் தான் திங்க வேண்டுமா என்ற கேள்வி ?? எழுப்பிய காட்சியும், கிராம வரைபடத்தில் உள்ள வாய்க்கால்கள், கவுறுகள், நெல் அடிக்கும் களம் கிணறுகள் போன்றவற்றை மறைத்து ஒரு குறிப்பிட்ட சில நபர்களுக்காக, விவசாயத்தை அழித்தும் அதிகாரிகள் ஆவணங்களை மறைத்து செயல்படுகிறார்கள் என்ற உருக்கமாக விவசாயி ஒருவர் பேசிய காட்சிகள் வைரலாகி வருகின்றது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் விவசாயத்தை ஆதரிக்கும் நிலையில், கரூர் புதிய பேருந்து நிலைய அமையும் இடத்தில் விவசாய நிலம் என்று அதிகாரிகள் தெரிவிக்காமல், விவசாய நிலத்தின் ஆவணங்களை மறைத்து தமிழக முதல்வரை அழைத்து வந்து அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும், ஆகவே உடனடியாக இந்த தகவலை தமிழக முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!