கோவை மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி பலி!!
31 January 2021, 10:41 amகோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மேட்டுப்பாளையம் இருகே சிறுமுகை லிங்காபுரம் கிராமம் சேர்ந்த சம்பத் குமார் (வயது 59) என்பவர் தனது விவசாய வயலில் இருந்து ஓடந்துறை காப்புக்காடு பாதை வழியாக தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மறைந்திருந்து காட்டு யானை சம்பத் குமார் தாக்கி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சிறுமுகை வனத்துறையினர் மற்றும் சிறுமுகை காவல் துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்தவர்கள் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
விவசாய நிலங்களில் அவ்வப்போது வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0
0