ஆடு மேய்க்க சென்ற போது புலி தாக்கிய விவசாயி பலி : சடலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!!

19 July 2021, 9:11 pm
Tiger Attack - Updatenews360
Quick Share

நீலகிரி : கூடலூர் பகுதியில் ஆடு மேய்க்க சென்ற வரை புலி தாக்கியதில் சம்பவ இடத்தில் இறந்துள்ளார் இறந்தவரின் உடலை ஊர்மக்கள் வாங்க மறுப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மன்வயல் ஒட்டியுள்ள நிங்கனகொல்லி பகுதியில் வசிப்பவர் குஞ்சு கிருஷ்ணன் (வயது 55). இவர் இப்பகுதியில் விவசாயம் செய்துகொண்டு ஆடு மேய்த்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று மதியம் ஆடு மேய்க்க சென்ற பொழுது அவ்வழியாக இருந்த புலி இவரை தாக்கியுள்ளது. இவரின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்த நிலையில் புதருக்குள் சடலமாக கிடந்தனர்.

இப்பகுதியானது முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஒட்டிய பகுதி என்பதால் அடர்ந்த வனப்பகுதிக்கு புலி சென்ற நிலையில், தகவலறிந்து வந்த போலீசாரிடம் மக்கள் முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு தொகுதி எம்எல்ஏ ஜெயசீலன், கூடலூர் டிஎஸ்பி சிவக்குமார், கூடலூர் ஆர்டிஓ சரவணன், கண்ணன், தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுமார் 5 கிலோமீட்டர் வரை சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து, காட்டு விலங்குகள் மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு வராமல் தடுப்பதற்காக அகழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை இவரின் உடலை எடுக்க விட மாட்டோம் என்று முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 103

0

0

Leave a Reply