தறிகெட்டு ஒடிய மாட்டுவண்டி… 80 அடி கிணற்றுக்குள் விழுந்த விவசாயி : 6 மணி நேர போரட்டத்தில் நடந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 4:41 pm
Farmer Rescue From Well -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே மாட்டு வண்டியுடன் 80 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த விவசாயி மற்றும் மாடுகளை ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டி அருகே உள்ள தோட்டத்துச் சாலையில் வசித்து வருபவர் விவசாயி கருப்பணன். விவசாயம் செய்து வரும் இவர் தனது தோட்டத்தில் வெட்டி வைத்திருந்த குச்சிகளை கொண்டுவருவதற்காக தோட்டத்தில் இருந்த மாட்டு வண்டியை கொண்டு சென்றுள்ளார்.

அப்போது தோட்டத்திற்கு அருகே சென்றதும் மாடுகள் மிரண்டு போய் தறிகெட்டு ஓடியுள்ளது. கருப்பண்ணனால் மாடுகளை கட்டுப்படுத்த முடியாததால் சாலை ஓரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத 80 அடி ஆழ கிணற்றுக்குள் வண்டியுடன் விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் இரண்டு ஜேசிபி மற்றும் இரண்டு கிரேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுமார் ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு விவசாயி கருப்பண்ணன் மற்றும் இரண்டு மாடுகளை சடலமாக மீட்டனர்.

கருப்பணன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாடுகளுடன் விவசாயி கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 198

0

0