யானை தாக்கி விவசாய தொழிலாளி பலி..!!

24 September 2020, 9:44 am
Quick Share

கோவை: கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் விவசாயக் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். விவசாயத் தொழிலாளி. இவரும் இவரது நண்பர் அருண் குமார் என்பவரும் விவசாயப் பணியை முடித்துவிட்டு நேற்று இரவு டிராக்டரில் ஆனைகட்டியை அடுத்த மூணுகுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது எதிரே வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அருண்குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து காரமடை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஞானப் பிரகாசத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.