காவிரி ஆற்றில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்…!!

By: Aarthi
14 October 2020, 1:03 pm
kmb protest - updatenews360
Quick Share

கும்பகோணம்: ஊக்கத்தொகை விலையை உயர்த்தி வழங்கக் கோரி விவசாயிகள் காவிரி ஆற்றில் நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரீப் சந்தை பருவத்துக்கான ஆதார மற்றும் ஊக்கத்தொகை அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து அறிவிக்ககோரி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காவிரி ஆற்றில் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையிலும், மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் முன்னிலையிலும் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து, ஆர்டிஓ விஜயனிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் கூறுகையில், நடப்பாண்டு காரீப் சந்தை பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையில் மத்திய அரசு கிலோ ஒன்றுக்கு 53 பைசா, தமிழக அரசு 50 பைசா உயர்த்தி ஊக்கத்தொகையாக அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.

கும்பகோணம் ஆர்டிஓ விஜயனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.இதுகுறித்து சுந்தரவிமல்நாதன் கூறியதாவது: நடப்பாண்டு காரீப் சந்தை பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையில் மத்திய அரசு கிலோ ஒன்றுக்கு 53 பைசா, தமிழக அரசு 50 பைசா உயர்த்தி ஊக்கத்தொகையாக அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் மீது அக்கறை கொண்டு நெல்லுக்கான ஆதார மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Views: - 40

0

0