சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்.. மீஞ்சூரில் சிக்கிய தந்தை, மகள்!

Author: Hariharasudhan
5 November 2024, 2:31 pm

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் இருந்து வெட்டப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக தந்தை, மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சர்ந்தவர் தேவிஸ்ரீ (17). இவரது தந்தை பாலசுப்பிரமணியம் (46). இதில் தேவிஸ்ரீ கல்லூரிப் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரயிலில் நேற்று (நவ.4) மாலை வந்துள்ளனர். இவ்வாறு இவர்கள் வந்த ரயில் மீஞ்சூரில் நின்று உள்ளது. அப்போது, இருவரும் 2 சூட்கேஸ்களுடன் அங்கு இறங்கியுள்ளனர்.

பின்னர், கொண்டு வந்த சூட்கேஸை அங்கு ஒரு இடத்தில் வைத்துவிட்டு புறப்பட்டு உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே ஊழியர் ஒருவர், அவர்களை தொடர்ந்து சென்று பிடித்து உள்ளார். இதனையடுத்து, இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் பேரில், மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், கும்மிடிப்பூண்டி போலீசார் வந்து உள்ளனர்.

பின்னர், அவர்கள் அந்த சூட்கேஸை திறந்துப் பார்த்து உள்ளனர். அப்போது அதில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து, இருவரிடமும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில், தேவிஸ்ரீ கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட அப்பெண், தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதை தந்தை பாலசுப்பிரமணியத்துக்கு தெரிய வந்து உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம், அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, அது கைகலப்பாக மாறி அப்பெண்ணைத் தாக்கி உள்ளார். இதில் அவர் இறந்துவிட்டார். இதனையடுத்து, அப்பெண்ணின் சடலத்தை ரகசியமாக அப்புறப்படுத்தி, எங்காவது போட்டுவிடலாம் என எண்ணி உள்ளனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுவன் மீது வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல்.. நெல்லையில் பயங்கரம்!

பின்னர், அந்தப் பெண்ணின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் வைத்து உள்ளனர். இதன் பிறகு, ரயிலில் ஏறி சென்னைக்கு வர திட்டமிட்டு, சூலூர்பேட்டையில் ரயில் ஏறி மீஞ்சூர் வந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வைத்துவிட்டு சென்றுவிடலாம் என எண்ணியபோது தான் ரயில்வே ஊழியர்களிடம் சிக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் மூதாட்டி என்றும், அவருக்கு 55 – 60 வயது இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பாலசுப்பிரமணியம் மற்றும் சிறுமி தேவிஸ்ரீ ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 322

    0

    0