இடத்தகராறில் இரட்டைக் கொலை! தந்தை, மகன் வெட்டிக் கொன்ற கொடூரம்!!

18 August 2020, 4:37 pm
Trichy Double Murder - Updatenews360
Quick Share

திருச்சி : சமயபுரம் அருகே இடத்தகராறில் தந்தை மகனை வெட்டிக் கொலை செய்த உறவினர்கள் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் நடு இருங்களுரைச் சேர்ந்த அந்தோனிராஜ் மகன்கள் ஆரோக்கியசாமி மற்றும் ரோக்குராஜ் இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு இருங்களூர் நடுகரை ஆற்றோர பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சில பகுதிகளை பிடித்து விவசாயம் செய்து வந்தனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாதை தொடர்பாக ஏற்பட்ட தகராரில் அண்ணன் ஆரோக்கியசாமியை ரோக்குராஜ் வெட்டி கொலை செய்தார். இந்த கொலை வழக்கின் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரோக்குராஜ் சிறைக்கு தண்டனை முடிவுற்றதால் வெளியே வந்தார்.

ரோக்கு ராஜூக்கு ஜான்டேவிட் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். அதேபோல ஆரோக்கியசாமிக்கு ஜேசுராஜ் (வயது 55) என்ற மகன் உள்ளார். அவர் இரானுவத்தில் பணியாற்றி் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு வண்டி செல்வதற்க்காக பாதை அமைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. ஜேசுராஜ் பாதை விடாததால் ரோக்குராஜ் பாதையை முள் வெட்டி அடைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜேசுராஜூம்,இவரது மகன் பிரின்ஸ் ம் சேர்ந்து ரோக்குராஜ் மற்றும் இவரது மகன் ஜான்டேவிட் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இந்த மோதலில் உயிரிழந்தவர்கள் அரிவாளால் வெட்டியதில் ஜேசுராஜ் இவரது மகன் பிரான்ஸிஸ் ஆகியோர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 38

0

0