மூன்று மகள்களை கொடூரமாக வெட்டிய தந்தை… நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan5 August 2025, 11:50 am
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 36) என்பவர், வீடு கட்டுவதற்காக வாங்கிய அதிகப்படியான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில், மனமுடைந்த அவர், தனது மகள்களான பிரக்திஷாஸ்ரீ (வயது 9), ரித்திகாஸ்ரீ (வயது 7), தேவஸ்ரீ (வயது 3) ஆகிய மூவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லை காரணமாக ஒரு தந்தை தனது மூன்று மகள்களைக் கொலை செய்துவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட இந்த துயர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நான்கு பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
