மகனை கடித்த நாயை வெட்டிய தந்தை : கைகலப்பால் 4 பேரின் மண்டை உடைப்பு… வழக்குப்பதிந்த போலீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan8 September 2025, 11:43 am
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் கவியரசன்(13) இவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவர் வளர்த்து வரும் நாய் கடித்துள்ளது.
இதனை அறிந்த பழனி தனது மகனை கடித்த நாயை கத்தியால் தாக்கியுள்ளார், இதில் படுகாயமடைந்த நாய் உயிருக்கு போராடி வரும் நிலையில் நாயை வளர்த்து வரும் மேகநாதன் குடும்பத்தினருக்கும் பழனி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பழனியின் மனைவி கன்னியம்மாள் மற்றும் தாத்தா ரேணு மகன் கவியரசன் மற்றும் மேகநாதன் உறவினர் வடிவேல் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச்சம்பவம் குறித்து, வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் இரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் தனது மகனை கடித்த வளர்ப்பு நாயை தந்தை வெட்டி நாய் உயிருக்கு போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
