பிப்.,8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு : பெற்றோர் அனுமதி கடிதம் கட்டாயம்!!

6 February 2021, 11:50 am
school_reopen_updatenews360
Quick Share

சென்னை : பிப்.,8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் தமிழக அரசு வெளியிட்டது. அதில், வரும் பிப்.,8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதனிடையே, பிப்.,8ம் தேதி பள்ளிகள் திறப்பை மீண்டும் உறுதி செய்த பள்ளிக்கல்வித்துறை, பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களின் அனுமதி கடிதத்தையும் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 17

0

0