கோவில் வளாகத்தில் பெண் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் : நாகையில் அரங்கேறிய கொடூரம்!!

8 January 2021, 2:17 pm
Templel Woman Harrased -Updatenews360
Quick Share

நாகப்பட்டினம் : கட்டிட வேலை செய்யும் பெண் கூலித் தொழிலாளியை கடத்தி கோவிலுக்குள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாக பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவர் கணவர் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார். கட்டிட கூலி வேலை செய்யும் சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

தனியாக வசித்து வந்த இவர் இரவு நேரத்தில் அவரது சகோதரி வீட்டிற்கு சென்று இரவு தங்குவது வழக்கம். அதுபோல் நேற்றிரவு தனது சகோதரி வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு சில இளைஞர்கள் சந்திராவை கடத்தி அருகே இருந்த கோவிலுக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.

இதில் உடல் நலம் பாதித்து சந்திரா நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காமராஜ் நகரில் உள்ள சந்திராவின் சகோதரி வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் இதுபற்றி புகார் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பெண்ணை கடத்தியதுமட்டுமல்லாமல் கோவிலுக்குள் கூட்டு பாலியல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 40

0

0