“வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்“ : அரசு அலுவலக சுவர் ஏறி குதித்து பெண் போலீஸ் அதிரடி சோதனை!!

13 November 2020, 10:11 am
Raid - Updatenews360
Quick Share

அரியலூர் : அரியலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் சுவர் ஏறி குதித்து சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு பெண் போலீசார் கணக்கில் வராத 1 லட்சத்து 5 ஆயிரம் பறிமுதல்.

அரியலூர் மாவட்ட அரசு பல்துறை வளாகத்திற்கு பின்புறம் தோட்டக்கலைத்துறை மாவட்ட இணைஇயக்குநர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை அதிரடியாக நுழைந்த லஞ்சஒழிப்பு போலீசார் அலுவலக கதவுகளை சாத்திவிட்டு தீவிர சோதனை நடத்தினர்.

லஞ்சஒழிப்பு டிஎஸ்பி சந்திரசேகர், ஆய்வாளர்கள் சுலோச்சனா, வானதி ஆகியோர் தலைமையில் வந்த போலீசார் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்புராஜனிடம் இருந்து கணக்கில் வராத 42 ஆயிரம் ரூபாய் பணமும், மற்றும் அலுவலக மேலாளர் பாரதிதாசன், பெண் உதவியாளர் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வாராமல் வைத்திருந்த 19 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் இவர்களிடம் மேற்கொண்ட விசாரனையின் அடிப்படையில் கீழப்பழுவூரில் உள்ள தோட்டக்கலை பண்ணை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது பண்ணை கேட் பூட்டப்பட்டிருந்ததால் சோதனைக்கு வந்த பெண் உள்ளிட்ட போலீசார் சுற்றுவவர் ஏறி குதித்து சோதனையில் ஈடுபட்டனர்.

அலுவலக குடோனில் மூட்டைகளுக்கிடையில் பணம் வைக்கப்பட்டுள்ளதா என மூட்டைகளை பிரித்து சோதனையை தீவிரபடுத்தினர். மேலும் அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதில் அங்கு பணியாற்றும் தோட்டக்கலை உதவிஅலுவலர் ரவிசங்கர் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத 44 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்புராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் 4 பேரிடமும் சேர்ந்து மொத்தமாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் முக்கிய ஆவனங்களை கைப்பற்றிய லஞ்சஒழிப்பு போலீசார் நான்கு பேரிடமும் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்யவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Views: - 35

0

0