நான் உனக்கு முத்தம் கொடுத்தது பொய்யா? பணி நேரத்தில் கள்ளக்காதலில் பெண் காவலர்.. செல்போன் ஆடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2025, 6:53 pm

தமிழக காவல்துறையில் “பாரா டியூட்டி” (Para Duty) என்பது, காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலர் தனது அன்றாடப் பணிகளைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு தனிப்பட்ட உதவியாளராகச் செயல்படும் பணியைக் குறிக்கிறது.

உதாரணமாக, ஒரு காவல் ஆய்வாளர் அல்லது துணை காவல் கண்காணிப்பாளர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தை ஓட்டுவது, அலுவலகப் பணிகளில் உதவுவது, அதிகாரியின் தனிப்பட்ட பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது போன்ற வேலைகளைச் செய்வது “பாரா டியூட்டி” என்று அழைக்கப்படுகிறது.

இது அதிகாரிகளின் அன்றாட செயல்பாடுகளை எளிதாக்குவதற்காக காவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்புப் பணியாகும்.

இந்த பணி வழக்கமான சட்டம்-ஒழுங்கு அல்லது குற்றத்தடுப்புப் பணிகளை விட சற்று மாறுபட்டது. இத்தகைய பாரா டியூட்டியை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரியும் ஏரல் தாலுகா ராஜபதி பகுதியை சேர்ந்த பெண் காவலர் தனது பணி நேரத்தில் தனது கள்ளக் காதலனோடு போனில் பேசும் ஆடியோ வைரல் ஆகி வருகிறது.

குறிப்பாக அந்த ஆடியோவில்,தனது கணவர் குடிகாரர் என்றும் அதனால் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என கூறுவதும், அவரோடு பேசும் அவரது ஆண் நண்பர் நான் உனது நெற்றியில் முத்தமிட்டது பொய்யா என்றும் எங்கெங்கு நாம் சந்தித்தோம் என்றும் வாக்குமூலம் அளிப்பது போல் பேசுவதும் கேட்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Female police officer's chatter during duty hours.. Shocking audio

மேலும் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த பாரா டியூட்டியின் போது காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் சென்ற பிறகு நிம்மதியாக தூங்க போகிறேன் என அந்தப் பெண் காவலர் கூறுவதும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் அவலட்சனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.

தங்களது பொறுப்பை மறந்து உல்லாச வாழ்க்கைக்காக காக்கிச் சட்டையை கலங்கப்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தனக்கு கணவரும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் மற்றொரு ஆண் நண்பரை ரகசியமாக தூத்துக்குடி வரும் போது சந்திக்கிறேன் என அந்தப் பெண் காவலர் கூறுவது அவர்களது கள்ளக்காதலை அம்பலப்படுத்துவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்…

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!