பண்டிகை கால சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு ; வெளியூர்வாசிகள் நிம்மதி..!!

Author: Babu Lakshmanan
3 September 2022, 11:05 am
special train - updatenews360
Quick Share

பண்டிகை கால கூட்டத்தை சமாளிக்க இன்று முதல் குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

பண்டிகை காலங்களில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வெளியூர்வாசிகள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும். எனவே, கூடுதல் ரயில்களை இயக்கவோ அல்லது ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவோ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்த நிலையில், பொதுமக்கள் வசதியாக ரயில்சேவையை மேற்கொள்ளும் விதமாக, குறிப்பிட்ட ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூர் – குருவாயூர் ரயிலில் 2ம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் 2ம் வகுப்பு முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றனர். இதேபோல, தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையால் பயணிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Views: - 166

0

0