பிரியாணிக்கு சால்னா கேட்டு தகராறு… ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து : கோவையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2024, 12:28 pm

பிரியாணிக்கு சால்னா கேட்டு தகராறு செய்த மர்மநபர்கள் ஹோட்டல் ஓனரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் சாலையில் பகுதியில் பல்வேறு பிரியாணி உணவகங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆபிதா என்ற பிரியாணி கடைக்கு சென்ற இருவர் புரோட்டாவிற்கு சால்னா கேட்டு கூச்சலிட்டதாக தெரிகிறது. உடனடியாக ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களுக்கு வேண்டியதை தர முற்ப்பட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆத்திரமாக பேசி தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதில் ஒருவர் கத்தியால் ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லாவை தாக்கியுள்ளார்.

இதனால் பதற்றமைந்த கடையின் ஊழியர்கள் உடனடியாக உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலிசார் தகராறி ஈடுப்பட்டவர்களை அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் கரீம் மற்றும் சமீர் என்பது தெரிய வந்தது. பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!