அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு : நாளை மறுநாள் மேற்கு வங்கம் செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!!

12 July 2021, 5:38 pm
annatha Shooting- Updatenews360
Quick Share

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நாளை மறுநாள் நடிகர் ரஜினிகாந்த் மேற்கு வங்கம் செல்கிறார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, நடிகை நயன்தாரா, மீனா, குஷ்பு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாண்டியராஜன், லிவிங்க்ஸ்டன் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

Rajinikanth in Annathe shooting to resum after six months - தமிழ் News -  IndiaGlitz.com - oceannews2day

இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிரந்தனர். இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் மேற்கு வங்கம் மாநிலம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மறுநாள் (ஜூலை 14) மேற்கு வங்கம் மாநிலம் செல்லும் அவர் 4 நாட்கள் தங்கி நடிக்க உள்ளார். அத்துடன் அண்ணாத்த படத்தில் ரஜினியின் காட்சிகள் நிறைவடைகின்றன. வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகவுள்ளது.

Views: - 277

2

1