வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து.. RTI மூலம் வெளியான முக்கிய தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 6:03 pm

வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து.. RTI மூலம் வெளியான முக்கிய தகவல்!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்கு தினமும் சுமார் 1000 டன் குப்பைகள் சேகாரமாகிறது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் டன் கணக்கில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

இந்த நிலையில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக்குழு கடந்த மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்துக்கு பிறகு குப்பைக் கிடங்கில் காற்றின் தர சோதனை குறித்த தகவல்கள் ஆர்டிஐ சட்டம் மூலம் கோரப்பட்டன.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் 06-04-2024 அன்று தீப்பிடித்தது, கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு அது அணைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பபாட்டு வாரியம் காற்றின் தர சோதனைகளை நடத்தியது தெரிய வருகிறது.

இது தொடர்பாக, RTI சட்டம் 2005ன் பிரிவு 6ன் கீழ் பின்வரும் தகவல்கள் கோரப்படுகின்றன.

06-04-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு வெள்ளலூர் குப்பைக் கிடங்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் TNPCB நடத்திய சமீபத்திய காற்றின் தரச் சோதனை முடிவுகள்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் 06-04-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து TNPCB சென்னை தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விவரம்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் 06-04-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து கோவை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்ட அறிக்கை விவரம்.

விண்ணப்பதாரர் ஆவணங்களுக்கான செலவு மற்றும் உத்தரவாதமான பிற கட்டணங்களைச் செலுத்தத் தயாராக உள்ளதாக குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக்குழுவின் செயலாளர் திரு.K.S.மோகன் தெரிவித்துள்ளார்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…