நகராட்சி குப்பை கிடங்கில் கொளுந்து விட்டு எரிந்த தீ : 3 மணி நேரமாக போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!!!

Author: Udayachandran
30 July 2021, 10:38 pm
Theni Fire -Updatenews360
Quick Share

தேனி : பெரியகுளம் நகராட்சியின் குப்பை கிடங்கில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தீயை கட்டுப்படுத்த தீயனைப்புத்துறையினர் மூன்று மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றது.

இந்த குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு அருகே இருளாயியம்மாள் காலனி, இ.புதுக்கோட்டை, ஜெ.ஜெ.காலனி, எ.புதுப்பட்டி அகிய கிராமங்கள் உள்ளன. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் தொடந்து நாள்தோரும் தீ பற்றி எரிந்த வன்னம் உள்ளது.

குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட குப்பைகளில் தீ பல இடங்களில் அதிக அளவில் எரிந்து வருவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகின்றது. மேலும் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மூச்சு தினரல், இருமல், உள்ளிட்ட பல்வேறு நோய்கலால் அதிகம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு புகார் கொடுத்த நிலையில் இன்று பெரியகுளம் தீ அணைப்புத்துறையினர் குப்பை கிடங்கள் ஏற்பட்ட தீயை 3 மணி நேரம் போராடி நீர் பாய்ச்சி கட்டுப்படுத்தி தீயை அனைத்தனர்.

Views: - 136

0

0