இதுக்கு ஒரு முடிவே இல்லையா? வெள்ளலூர் குப்பைக்கிடங்களில் பற்றி எரிந்த தீ : 5 மணி நேரமாக போராடிய தீயணைப்புத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 2:07 pm

கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கின் இரண்டு பகுதிகளில் தீ விபத்து – 5 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது.

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

குப்பை தரம் பிரித்து அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதியில் இருந்து நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீபிடித்து எரிந்துள்ளது. அப்போது அங்கிருந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவியது.

இதனிடையே குப்பை கிடக்கின் மற்றொரு பகுதியில் தீ பிடித்ததால், தெற்கு தீயணைப்பு நிலையம், மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்தில் வந்த 3 வாகனம் மூலம் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!