கோவை அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.!

12 August 2020, 1:02 pm
Cbe GH Fire - Updatenews360
Quick Share

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் மின் கசிவினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே மின் கசிவினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் விரைந்து வந்த தெற்கு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சசிகுமார் தலைமையிலான குழுவினர் மருத்துவமனையில் பரவயிருந்த தீயை அணைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 6

0

0