இரும்பு குடோனில் தீ விபத்து.! எரிந்து சாம்பலான ரூ.1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம்.!!

11 August 2020, 3:14 pm
Tirupur Godown Fire - Updatenews360
Quick Share

திருப்பூர் : பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள கூத்தம்பாளையம் பிரிவு பாலாஜி நகரில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை செயல்பட்டு வருகிறது இன்று காலை இரும்பு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் .

தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த தீ விபத்தில் நேற்றைய தினம் வியாபாரம் முடித்து கல்லாப் பெட்டியில் வைத்துச் சென்ற ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மின்கசிவு காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் தீ விபத்து நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 7

0

0