பட்டாசு கடையில் வெடிவிபத்து: தாத்தாவுடன் தீயில் கருகி பலியான 2 பிஞ்சுக் குழந்தைகள்!!

18 April 2021, 2:32 pm
fire accident - updatenews360
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம் வர தாமதம் என்றும் பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டினர்.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மத்திய பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காட்பாடி டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த தீ விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகள் என மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடை முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 37

0

0