முதல்ல மதம், இப்போ கடவுளை வைத்து பாஜக அரசியல் : பிரபல அரசியல் வாரிசு கருத்து!!

21 November 2020, 7:06 pm
vijay Vasanth - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழகத்தில் பாஜகவில் இணைவதற்கு ஆள் இல்லாததால் முருகனை இணைத்துக்கொண்டு வேல் யாத்திரை நடத்துகிறார்கள் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் விஜய் வசந்த் குளச்சல் பகுதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் பாஜகவில் இணைவதற்கு யாரும் இல்லாத நிலையில் கடவுள் முருகனை இணைத்துக்கொண்டு வேல் யாத்திரை நடத்தி வருவதாகவும் முன்பெல்லாம் மதத்தை வைத்து அரசியல் நடத்திய பாஜக தற்போது கடவுளை வைத்து அரசியல் நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதால் ஸ்டாலின் தலைமையிலான திமுக காங்கிரஸ் கூட்டணி தான் ஆட்சி அமைக்க உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் ஜாதி மதம் கடந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்கும் நிலையில் பாஜகவின் யாத்திரை உள்ளிட்ட செயல்பாடுகள் மக்களிடையே பிரிவினையை தூண்டுவதாக உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Views: - 14

0

0