தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக ‘காகிதமில்லா பட்ஜெட்’ இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!!

Author: Aarthi Sivakumar
13 August 2021, 9:37 am
Quick Share

சென்னை: தமிழக சட்டசபையில் முதன் முதலாக காகிதமில்லா ‘இ – பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக அரசின் 2021 – 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 23ம் தேதி அப்போதைய துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்தார். அதன்பின் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதையடுத்து, 2021 – 2022ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தியாகராஜன் முதன் முதலாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

tn gvt - updatenews360

தமிழக சட்டசபையில் முதன் முறையாக இன்று காகிதமில்லா இ – பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை, கணினி திரையில் ஒளிரும். இது தவிர அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் கையடக்க தொடுதிரை கணினி வழங்கப்பட உள்ளது. இதிலும், பட்ஜெட் உரை இடம் பெற்றிருக்கும். புத்தகத்தை புரட்டுவது போல பக்கங்களை முன்னும் பின்னும், மேலும் கீழும் எம்.எல்.ஏ.,க்கள் நகர்த்தி உரையை பார்க்கலாம்.

இடைக்கால பட்ஜெட்டில் 2021 – 22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன் 5.70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். வருவாய் பற்றாக்குற 41 ஆயிரத்து 417 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. இது, அதிகரிக்க வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலின்போத தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதை நிறைவேற்றும் வகையில் புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 252

0

0