படகு விபத்தால் மீனவர்கள் மாயம் : பலியான 5 மீனவர்கள் நினைவஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!!

6 November 2020, 2:41 pm
fishermans Dead - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் பலியான 5 மீனவர்களுக்கு நினைவஞ்சலி ஊர்வலம் மற்றும் மலரஞ்சலி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின்கட்டுமான வடிவமைப்பு சரியில்லாததால் துறைமுக முகத்துவாரத்தில் விபத்தில் சிக்கி ஏராளமான மீனவர்கள் பலியாகி வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மார்த்தாண்டம் துறையைச் சேர்ந்த இக்னேஷியஸ் மற்றும் சிபு வள்ளவிளையைச் சேர்ந்த அந்தோணி ஆகிய மீனவர்கள் பலியானார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் பூத்துறையை சேர்ந்த சேர்ந்த (பெரின் 31)என்ற மீனவரும் விபத்தில் சிக்கி மாயமானார்.

இவரை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.அவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை இதேபோன்று ஏற்கனவே பலியான முள்ளூர்துறையைச் சேர்ந்தஅந்தோனி என்பவருடைய உடலும் கிடைக்காத நிலையில் கடந்த 4 மாதங்களில் பலியான 5 மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேங்காய்பட்டணம் துறைமுகம் முன் பகுதியில் இருந்து துறைமுகம் நோக்கி தூத்தூர் மற்றும் இணைய மண்டலத்தை சேர்ந்த மீனவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.

பெரின் (வயது 31) என்கின்ற மீனவர் நேற்று முன்தினம் மாயமானதை தொடர்ந்து அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தூத்தூர் மண்டலம் மற்றும் இணைய மண்டலத்தில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை எனவே அரசு துறைமுகத்தின் முகத்துவாரத்தில் அகலத்தை கூட்டியும் துறைமுகத்தில் மாயமான மீனவர்களை தேடும் பணிக்கு உரிய உபகரணங்களை வழங்க வேண்டும் எனவும் துறைமுகத்தில் மணல் திட்டுக்களை அப்புறப்படுத்த நிரந்தரமாக மற்றும் இயந்திரத்தை நிறுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு மக்களுக்காக நிறைவேற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 17

0

0