லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..!!

Author: Aarthi
9 February 2021, 11:46 am
accident - updatenews360
Quick Share

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி – இந்திராணி தம்பதியர், தங்களது குடும்பத்துடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பி உள்ளனர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அத்திமானம் என்ற இடத்தில் அவர்கள் சென்ற கார், முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சுப்பிரமணி, அவரது மனைவி, மகள்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 42

0

0