வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள்.. ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிய கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2023, 6:47 pm

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள்.. ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அனுப்பிய கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம்!!

வரலாறு காணாத மழை சென்னை மாநகரத்தையும் புறநகர் பகுதிகளையும் புரட்டிப்போட்டு விட்டது. குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் மொத்தமாக தடைபட்டது. உணவுக்காகவும் குடிநீருக்காகவும் மக்கள் தவித்து போய் விட்டனர். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களின் உடமைகள் மொத்தமாக வெள்ளநீரில் போய் விட்டது. அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலர் அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து வருகின்றனர்.

இது தவிர, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள், அரசு அதிகாரிகள் சார்பாக பொருட்களை சென்னைக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கோவை மாநகராட்சி மூலம் ஒப்பந்ததாரர்களிடம் நிதி திரட்டினர். நிதி அளித்த அனைத்து ஒப்பந்ததாரர் நண்பர்கள் அனைவருக்கும் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் திரு. உதயகுமார் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!