கனமழையால் பூக்கள் விலை உயர்வு : மதுரை மலர் வியாபாரிகள் பாதிப்பு!!

8 November 2020, 12:42 pm
Flower Rate - Updatenws360
Quick Share

மதுரை : மலர் சந்தையில் தொடர்ந்து பூக்களின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்/

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து விற்பனைக்காக மலர்கள் கொண்டு வரப்படுகின்றன. நாள்தோறும் பூக்கள் மொத்ததமாகவும் , சில்லறையாகவும் விற்பனையாகும்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பூக்கள் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. மல்லிகை பூ – ரூ.200லிருந்து ரூ.250, அரளி பூ-ரூ.30, பிச்சி பூ -ரூ150, முல்லை பூ-ரூ.250, சம்பங்கி -ரூ 30, செவ்வந்தி – ரூ.60, செண்டு பூ ரூ.30, துளசி ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைப் போலவே இன்றும் பிற பூக்களின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாமரை மலர் மட்டும் மதுரையில் இருந்து டெல்லிக்கு ஏற்றுமதி ஆவதால் ஒரு பூ ரூ.10க்கு விற்பனையாகிறது. வருகின்ற நாட்களில் மல்லிகைப் பூவின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 24

0

0