திமுக பிரமுகருக்கு சொந்தமான ஆவின் விற்பனையகத்தில் குழந்தைகள் வாங்கிய குல்பியில் ‘ஈ’ : பரபரப்பு சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 2:28 pm

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் ஒருங்கிணைந்து விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் உற்பத்தி நிலையம் விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ளன.

இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக பிரமுகர் தினகரன் பதவி வகித்து வருகிறார்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிலையம் எதிரே ஆவின் பாலகம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் திமுக பிரமுகரும் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஆவின் சேர்மன் ஆகவும் பதவி வைக்கும் இவருக்கு சொந்தமான ஆவின் பாலகத்தில், குளுகுளு கோடை கொண்டாட்டம் என பேனர் அச்சிடப்பட்டு கோடை காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆவின் ஐஸ் கிரீம், ஆவின் குல்பி மற்றும் ஆவின் பால் பாக்கெட், ஆவின் நெய், ஆவின் பால்கோவா என அடுக்கடுக்காக விற்பனை செய்து வருகின்றனர்.

அதில் ஏராளமான பொதுமக்கள் ஆவின் என்றால் தரமும் நியாயமான விலை இருக்கும் என்ற நோக்கில் அங்கு வந்து பால்பாக்கெட் மற்றும் ஆவின் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் கோடை காலம் என்பதால் குல்பி ஐஸ்கிரீம் குளிர்பான வகைகளையும் பொதுமக்கள் அதிக அளவில் குழந்தைகளுக்கு வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் ஆவின் பால் பண்ணை அருகே இருக்கும் ஆவின் விற்பனை நிலையத்தில் 30 ரூபாய்க்கு வாங்கிய ஆவின் குல்பியில் ஈ இருந்துதை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஆவின் பாலகத்தில் உள்ள விற்பனைகளிடம் கேட்டதற்கு, ஆம் குல்பியில் ஈ தான் உள்ளது. நாங்கள் ஆவின் பொருட்களை நேற்று தான் திறந்து எடுத்தோம் . உற்பத்தி செய்யப்பட்ட தகவலும் இதில் விலை பட்டியலும் இல்லை. ஈ இருந்தது உண்மைதான் என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து மேல் இடத்தில் தகவல் சொல்கிறோம் என சொல்லியதை அடுத்து அந்த வாடிக்கையாளர் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

ஆவினில் வைக்கப்பட்ட ஆவின் குல்பியில் ஈ இருந்த சம்பவம் விழுப்புரம் மட்டுமல்லாமல் தமிழக முழுதும் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!