கலர் கலரா ஷவர்மா…. மொத்தமாக அள்ளிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் : 12 கடைகளுக்கு தடை விதிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2022, 11:05 am

விழுப்புரம் : உரிய பாதுகாப்பு இல்லாமல் ஷவர்மாவை விற்பனை செய்த 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை விதித்து மூன்று கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

கேரளாவில் ஷவர்மா உணவு சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ஷவர்மா போன்ற துரித உணவுகளை தவிர்த்து நமது பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அரசு அறிவுறுத்தலின்பேரில் தமிழகம் முழுவதும் ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தரமற்ற ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நகராட்சி பகுதியில் இயங்கும் 12 ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 3 கடைகளில் அதிகளவில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட ஷவர்மா விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து 12 கிலோ ஷவர்மாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை ஒன்றுக்கு 2 ஆயிரம் என ஆறாயிரம் அபராதம் விதித்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

மேலும் விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் போதிய வசதி இல்லாமல் இயங்கிய 12 ஷவர்மா கடைகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். தடையை மீறி விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கபப்டுமென எச்சரிக்கை செய்தனர்.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!