பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் : போக்சோவில் இளைஞர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2021, 10:52 am
Pocso Youth Arrest -Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பொன்னேரி குரும்பர் வட்டம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவர் லாரி ஓட்டுநராக உள்ளார்.

இவர் வாணியம்பாடியை அடுத்த கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தி கூறியுள்ளார்.

மேலும் கடந்த 21ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்துள்ளார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து புகாரின் பேரில் விஜய்யை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த போலிசார் குற்றவியல் நீதிமன்றத்தில் இளைஞரை ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 806

0

0