தொடர் மழை எதிரொலி – சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

7 July 2021, 1:55 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரம் கொண்ட இந்த மலைக் கோவிலுக்கு மாதம்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் என 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.நோய் பரவல் காரணமாக கடந்த 2 மாதத்துக்கு மேலாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது நோய்களின் தாக்கம் குறைந்ததன் காரணமாக மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 7,8 .9, 10 ஆகிய நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்,

வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக மலைக்கோவில் செல்லும் வழியில் உள்ள நீர்வரத்து ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்த காரணமாகவும், தொடர்மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள காரணமாக இன்று பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இரண்டு மாதத்திற்கு பின்னர் மலைக்கோவில் செல்ல வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நூழைவு வாயிலில் சமூக இடைவெளி பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக திரண்டு நின்றனர். மாவட்ட நிர்வாகம்,காவல் துறையினரின் பாதுகாப்பு பணிகளின் அலட்சியத்தால் நோய் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பின்னர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்து திரும்பி சென்றனர்.

Views: - 125

0

0