முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினம் : கோவையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2023, 12:49 pm

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினம் : கோவையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எம்.ஜி.ஆர்- இன் 36ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், திரைப்பட துறையினர் அவரது சிலைக்கும் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ,

அதன் ஒரு பகுதியாக கோவையில் அண்ணாசிலை பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன், கே.ஆர்.ஜெயராம் உட்பட பல்வேறு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் எம்ஜிஆர்-ன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே