சுகாதாரத்துறை முன்னாள் செயலர் பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார் : விசாரணைக்கு உத்தரவு!

3 August 2020, 3:49 pm
beela rajesh - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு வழக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 56 ஆயிரத்தை பாதிப்புகள் கடந்துள்ளன. இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் பங்கெடுத்த செயல் வீரர்களில் ஒருவராக தென்பட்டவர்தான் பீலா ராஜேஷ்.

ஆரம்பத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த இவர், நாள்தோறும் மாலை சுகாதாரத்துறையின் சார்பில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில், கொரோனா நிலவரம் குறித்து விளக்கி வந்தார். அவரது இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலம் மக்களுக்கு அறிமுகமானார்.

பின்னர், அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட பீலா ராஜேஷ், வணிக வரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட இந்தப் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செயலருக்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், விரைவில் அவர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளார்.

Views: - 2

0

0