மூட்டை சுமக்கும் முன்னாள் அமைச்சர்.. இணையத்தில் தீயாய் பரவும் VIDEO : முழு விபரம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2024, 5:10 pm

மூட்டை சுமக்கும் முன்னாள் அமைச்சர்.. இணையத்தில் தீயாய் பரவும் VIDEO : முழு விபரம்.!!

புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக கமலக்கண்ணன் இருந்து வந்தார். இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் விளை நிலங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

மேலும் படிக்க: இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK!

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை அம்பகரத்தூர் பகுதியில் உள்ள தனியார் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளார்.

அப்பொழுது நெல் மூட்டை இறக்குவதற்கு பணியாளர்கள் குறைவாக இருந்ததால் கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகளை தானே முன்வந்து டிராக்டரில் இருந்து இறக்கி நெல் கொள்முதல் நிலையத்தில் இறக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!