பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி : தங்கத் தேர் இழுத்து நேர்த்திக்கடன்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 10:04 am

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுக நிர்வாகியும், முன்னாள் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.

ரோப்கார் மூலம் மலைக்கு சென்ற அவர் சாயரட்சையில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை இராஜஅலங்காரத்தில் சிறப்பு தரிசனம் செய்து அர்ச்சனைகள் செய்தார்.

பின்னர் அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பின்னர் தங்கத்தேர் இழுத்து நேர்ச்சை செலுத்தினார்.

பின்னர் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்தடைந்தார். நிகழ்ச்சியில் அதிமுக பழனி அதிமுக கவுன்சிலர் ராஜா முகமது மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?