முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 6:57 pm
SP Velumani - Updatenews
Quick Share

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60 வது குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.

மறைந்த மாபெரும் தலைவர்களில் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும், 60 வது குருபூஜை விழாவும் இன்று நாடுமுழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடபட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மாலையிட்டு மரியாதை செய்ததுடன் தீபாராதனை செய்து வழிபட்டு மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து அருகில் உள்ள ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பெருமாள் சன்னதிகளில் சாமிதரிசனமும் மேற்கொண்டார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணிக்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும், சாலவைகள் அணிவித்தும் சிறப்பான வரவேற்பளித்தனர்.

Views: - 372

0

0