ஈரோடு அருகே மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழந்த சோகம்..!!

8 November 2020, 3:00 pm
car acc - updatenews360
Quick Share

ஈரோடு: அந்தியூர் அருகே மலைப்பகுதி சாலையில் கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்தியூர் மலைப்பகுதியில் கூலி தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு சென்ற கார், தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தம்புரெட்டி மலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் வட்டக்காடு என்ற இடத்திற்கு தோட்ட வேலைக்காக வாடகை டாட்டா சுமோ காரில் சென்றுள்ளனர்.

அப்போது, மலை சாலையில் உள்ள இறக்கத்தில் கார் இறங்கிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள மண் பகுதியில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தேவராஜ், சிக்கணன், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேர் உயிரிழந்ததோடு, 11 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

முதல்கட்ட விசாரணையில் திடீரென காரில் ஏற்பட்ட பழுதும், காரில் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் சென்றதுமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Views: - 14

0

0