இலவச அரிசி கொடுத்து ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை : திமுக நூதனம்!!

By: Udayachandran
4 October 2020, 2:20 pm
Thiruvallur DMK - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : பொன்னேரி அருகே 5 கிலோ அரிசி நிவாரணம் கொடுத்து ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் சின்ன மாங்கோடு கிராமத்தில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை திமுக சார்பில் நடைபெற்றது இதில் உறுப்பினராக சேரக்கூடிய பொது மக்களுக்கு 5 கிலோ அரிசியை நிவாரணமாக வழங்கி ஆன்லைனில் அனைவரையும் உறுப்பினராக சேர்த்தனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் வேணு, முன்பெல்லாம் திமுகவில் 25 உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு வலது கை இடது கையில் 25 பேரின் கையெழுத்தை தானே போட்டு உறுப்பினர் அடையாள அட்டை கூட வழங்காமல் இருப்பேன். ஆனால் தற்போது அப்படியில்லை ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்க அறிவுறுத்தியதால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு தெரிவித்தார்.

நிவாரணமாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டதால் ஏராளமானோர் உறுப்பினராக தங்களை பதிவு செய்ய அங்கு திரண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுகவினர் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த நூதன முறையில் திமுக தலைவர் ஸ்டாலின் படம் ஒட்டப்பட்ட பையில் 5 கிலோ அரிசி வழங்கி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் திமுக ஒன்றிய செயலாளர் சுகுமாரன் ரமேஷ் ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Views: - 90

0

0